துபாயில் ராஜபக்சே குடும்பத்தினர் பல்லாயிரம் கோடி ரூபாய் பதுக்கல்

வெள்ளி, 29 ஜனவரி 2016 (07:33 IST)
துபாய் நாட்டு வங்கியில், ராஜபக்சே குடும்பத்தினர் 25,000 கோடி ரூபாய் அளவுக்கு பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நாடாளுமன்றத்தில் சிறப்புரை ஆற்றவும் திட்டமிட்டுள்ளார்.


 
 
துபாய் நாட்டில் பதுக்கப்பட்டுள்ள பணம் குறித்து எதிர்க்கட்சியின் முதன்மை அமைப்பாளரான அனுர குமார திஸாநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மாகன சபை முதல்வரான லக்ஷ்மன் கிரியெல்ல, இந்த விவகாரம் குறித்து பிரதமர் ரணில் நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக சிறப்புரை ஆற்றவுள்ளதாக கூறினார். மேலும், துபாய் நாட்டு வங்கியில், ராஜபக்சே குடும்பத்தினர் 25,000 கோடி ரூபாய் அளவுக்கு பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்
 
மேலும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச துபாய் நாட்டில் உள்ள வங்கி ஒன்றில், கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை முதலீடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்
 

வெப்துனியாவைப் படிக்கவும்