இந்திய மீன்வர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் குறிப்பாக புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வர மீனவர்கள், இலங்கை கடலோர காவல்துறையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதுமாக உள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவுக்கு 3 நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று செவ்வாய்கிழமை [04-10-16] வருகை புரிந்தார். இன்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நிதின் கட்கரி, ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரணில் விக்ரமசிங்கே, ”இந்தியா-இலங்கை மீனவர் பிரச்சினைகளை தீர்க்க, இரு நாட்டு மீனவர் அமைப்புகளும் இணைந்து பேச்சு வார்த்தை நடத்துவது அவசியம். இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வரும்போதுதான் கைது நடவடிக்கை எடுக்க வேண்டி வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.