புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்!!

சனி, 29 ஜூலை 2017 (12:06 IST)
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது கைஃப் பேஸ்புக் பக்கத்தில் தனது மகனுடன் செஸ் விளையாடும் படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தால் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.


 
 
இந்நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள் பலர் செஸ் விளையாட்டு இஸ்லாமிய மதத்திற்கு எதிரானது. அது இஸ்லாமிய மதத்தில் தடை செய்யப்பட்ட விளையாட்டு என கூறி சர்ச்சையை கிளப்பிவிட்டனர்.
 
ஆனால், முகமது கைஃப் பொ றுமையாக அவர்களது கேள்விகளுக்கு விளக்கமளித்தாலும் அதை அவர்கள் ஏற்க தயாராக இல்லை. எனவே, பொறுமையை இழந்த கைஃப், செஸ் விளையாடுவது இஸ்லாத்துக்கு எதிரானதா? அப்படியானால், மூச்சுவிடுவதும் இஸ்லாத்துக்கு எதிரானதா என்று சொல்லுங்கள்’ என்று கூறி வெளியேறினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்