ஜிகா வைரஸ் பீதி: டென்னிஸ் வீரர்கள் ஒலிம்பிக்கில் இருந்து விலகல்

ஞாயிறு, 17 ஜூலை 2016 (14:34 IST)
ஜிகா வைரஸ் பீதியால் டென்னிஸ் வீரர்கள் ராவ்னிக், ஹாலெப் ஒலிம்பிக்கில் இருந்து விலகல்.


 
31-வது ஒலிம்பிக் போட்டி அடுத்த மாதம் பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக், ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் ஆகியோர் ஜிகா வைரஸ் தங்களை தாக்கி விடுமோ என்ற பீதியில் விலகியுள்ளனர்.

இது குறித்து ராவ்னிக் கூறுகையில், ”பிரேசிலில் நாட்டில் பரவும் ஜிகா வைரஸ் பாதிப்பால், கனத்த இதயத்துடன் ஒலிம்பிக்கில் இருந்து விலகுகிறேன்.” என்றார்.

இது குறித்து சிமோனா ஹாலெப் கூறுகையில், “அபாயகரமான ஜிகா வைரஸ் காரணமாக ஒலிம்பிக்கில் இருந்து விலகுகிறேன். உடல் ஆரோக்கியம் விஷயத்தில் நான் விபரீத பரிட்சை  எடுக்க விரும்பவில்லை. எனது குடும்பத்தினர் கவலைப்படுகிறார்கள். எனக்கு குடும்பமே மிகவும் முக்கியம்” என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்