கடைசி ஓவர் வரை த்ரில்.. உலகக்கோப்பை சாம்பியன் ஆனது இந்தியா..!

Siva

ஞாயிறு, 30 ஜூன் 2024 (07:35 IST)
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நேற்று இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணி இடையே நடந்த நிலையில் கடைசி ஓவர் வரை த்ரில்லாக சென்ற இந்த போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்த நிலையில் விராத் கோஹ்லி அபாரமாக பேட்டிங் செய்து 76 ரன்கள் எடுத்தார்.

அதன்பின் 177 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி ஒரு கட்டத்தில் 30 பந்துக்கு 30 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தது.

ஆனால் இந்திய அணியின் அபார பந்துவீச்சு காரணமாக அந்த அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை பெற்றது.

இதனை அடுத்து இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது .

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்