உலகக்கோப்பை கால்பந்து: குரோஷியா, செர்பியா, மெக்சிகோ அணிகள் வெற்றி

திங்கள், 18 ஜூன் 2018 (08:44 IST)
ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று மொத்தம் நான்கு போட்டிகள் நடைபெற்றது. இதில் குரோஷியா, செர்பியா, மெக்சிகோ ஆகிய அணிகள் வெற்றி பெற்றது. சுவிஸ் மற்றும் பிரேசில் அணிகளுக்கு இடையிலான போட்டி மட்டும் டிரா ஆனது
 
நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் குரோஷியா மற்றும் நைஜீரியா அணிகள் மோதியது. இந்த போட்டியில் குரோஷியா 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி. அதேபோல் இரண்டாவது போட்டி: கோஸ்டோ ரிகா மற்றும் செர்பியா அணிகள் மோதியது. இந்த போட்டியில் செர்பியா அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது
 
நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் ஜெர்மனி மெக்சிகோ அணிகள் மோதியது. இந்த போட்டியில் மெக்சிகோ அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. கடைசி போட்டியான நான்காவது போட்டி: பிரேசில் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதியது. இந்த போட்டி 1-1 என்ற கோல்கணக்கில் போட்டி டிரா ஆனது
 
இன்று ஸ்வீடன் – தென்கொரியா, பெல்ஜியம் – பனாமா, துனிஷியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெறும்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்