மகளிர் ஆசிய கோப்பை: இறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா பாகிஸ்தானுடன் மோதலா?

வியாழன், 13 அக்டோபர் 2022 (12:32 IST)
மகளிர் ஆசிய கோப்பை: இறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா பாகிஸ்தானுடன் மோதலா?
கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
 
இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது
 
இதனையடுத்து 149 ரன்கள் எடுத்தால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய தாய்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்திய அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது
 
இந்த நிலையில் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்னும் சில நிமிடங்களில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறும். இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆவேசமாக மோதும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்