சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா - வங்காள தேசம் விளையாடும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடக்க உள்ளது. இதில், நடப்பு சாம்பியன் இந்தியா, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ள வங்காள தேசத்தை எதிர்கொள்கிறது.
இந்தியாவை இலங்கையால் வெல்ல முடிந்தபோது எங்களால் ஏன் வெல்ல முடியாது என்று கேள்வி எழுப்பியுள்ள மஷ்ரஃபே மொர்டசா, இந்தியாவுக்கு தான் வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தம் அதிகம், ஆனால் எங்களுக்கோ இது இன்னொரு போட்டி அவ்வளவுதான் என்று கூறியுள்ளார்.