ரிஷப் பண்ட் சீக்கிரம் ஆட்டமிழக்கிறார்; அவரை இன்னும் பின்னால் இறக்க வேண்டும் – முன்னாள் வீரர் கருத்து

செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (11:31 IST)
இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பண்டை நான்காவதாக இறக்காமல் இன்னும் கீழ் வரிசையில் இறக்க வேண்டும் என விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு தோனிக்குப் பிறகு புதிய விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை உருவாக்க இந்திய அணி திட்டமிட்டு அவருக்கான வாய்ப்புகளை வழங்கி வருகிறது. அதிரடியான ஆட்டத்துக்குப் பெயர் போன ரிஷப் பண்ட் சில மோசமான ஷாட்களால் ஆட்டமிழந்து சொதப்பி வருவது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.  

அவரது ஆட்டம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள வேளையில் முன்னாள் வீரர் லக்‌ஷ்மண் ‘ ரிஷப் பண்ட் நான்காவது இடத்தில் இறங்குவதால் அவரது இயல்பான ஆட்டமான ஆக்ரோஷத்தோடு விளையாட முடியவில்லை. அவரை 5 அல்லது 6 ஆவதாக இறக்க வேண்டும். மோசமான பேட்டிங்கால் 4-வது வரிசையில் களமிறங்க அனுபவம் வாய்ந்த ஹர்திக் பாண் டியா, ஸ்ரேயஸ் ஐயர் போன்ற வீரர்கள் உள்ளனர். ரிஷப் பந்த் அதிக அழுத்தத்துக்கு ஆளாகக்கூடாது. தோனியின் இடத்தை எடுத்துக் கொண்டதால் அவர் தன் மேல் அதிக அழுத்தத்தை உணர்கிறார்.  அணி நிர்வாகம் அவரை 5 அல்லது 6-வது இடத்தில் களமிறக்கி அவரின் திறமையை வெளிப்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்