கேல் ரத்னா விருது, விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கணைகள் மற்றும் பயிற்சியாளர்கள் போன்றவர்களுக்கு வழங்கப்படும் ஒன்று. அதன்படி, இந்த ஆண்டிற்கான வீரர்கள் விராட் கோலி மற்றும் ரஹானே பெயரை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது.
இதையடுத்து, ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதிற்கு கிரிக்கெட்டில் சச்சின், தோனிக்கு அடுத்து விராட் கோலிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
மேலும், அர்ஜூனா விருது கடந்த ஆண்டு ரோகித் சர்மா பெற்றதை தொடர்ந்து, இந்த ஆண்டு ரஹானேவுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.