விராத்கோஹ்லி, அஸ்வினுக்கு கிடைத்த முக்கிய விருது

புதன், 1 மார்ச் 2017 (21:12 IST)
பிசிசிஐ என்று கூறப்படும் இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு வருடந்தோறும் விருதுகள் வழங்கி கெளரவிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுகள் பெற்ற வீரர்களின் பெயர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் வரும் மார்ச் 8ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறவுள்ள விழாவில் வழங்கப்படும்

 


இன்றைய அறிவிப்பின்படி இந்திய கேப்டன் விராத் கோலிக்கு பாலி உம்ரேக்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விருதை விராத் கோஹ்லி மூன்றாவது முறையாக பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இவர் இந்த விருதை கடந்த 2011-12, 2014-15ல் வென்றுள்ளார். இந்த விருதை மூன்று முறை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை விராத் கோஹ்லி பெற்றுள்ளார்.

அதேபோல் தமிழக வீரர் அஸ்வின், திலிப் சர்தேசாய் விருதை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் இந்த விருதை இரண்டாவது முறையாக வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுகிறார் அஸ்வின்.

வெப்துனியாவைப் படிக்கவும்