அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நேர் செட்களில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி!

செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (14:56 IST)
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் முதல் சுற்றில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்
 
நியூயார்க்கில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் செரினா வில்லியம்ஸ் முதல் சுற்றில் மான்டினீக்ரோ நாட்டு வீராங்கனை கோவினிஸ் என்பவரை எதிர்கொண்டார் 
 
இந்த போட்டியில் செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்றார் என்பதும் ஒரு சில நிமிடங்களில் இந்த போட்டி முடிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இதனையடுத்து செரீனா வில்லியம்ஸ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மேலும் முதல் சுற்றில் அன்ட் கோனடாவிட் (எஸ்டோனியா), கிரஜ்கோவா (செக்குடியரசு) லைலா பெர்னாண்டஸ் (கனடா), ஜபேஷா (துனிசியா) ஆகியோர்  வெற்றி பெற்றனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்