பாசப் போராட்டம் - சகோதரியை வென்ற செரீனா, விட்டுக் கொடுத்த வீனஸ்

புதன், 9 செப்டம்பர் 2015 (18:59 IST)
நடப்பு சாம்பியனும், உலகின் முதல்நிலை வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) கால் இறுதியில் தனது சகோதரி வீனஸ் வில்லியம்ஸை 6–2, 1–6, 6–3 என்ற என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்கு பிறகு வென்றார்.
 
யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் டென்னிஸ் சகோதரிகளான வீனஸ், செரீனா ஆட்டத்தைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் அரங்கம் முழுவதும் நிறைந்திருந்தது.
 
நடப்புச் சாம்பியனும், உலகின் முதல்நிலை வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) கால் இறுதியில், 23ஆம் நிலை வீராங்கனையும் தனது சகோதரியுமான வீனஸ் வில்லியம்ஸை எதிர்கொண்டார்.
 
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை செரீனா 6–2 என்ற கணக்கில் எளிதில் வென்றார். ஆனால், விடா முயற்சியுடன் 2ஆவது செட்டை வீனஸ் வில்லியம்ஸ் 6–1 என்ற கணக்கில் எளிதில் வென்று பதிலடி கொடுத்தார். இருவரும் தலா ஒரு செட்டை வென்று இருந்த நிலையில் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் கடைசி செட்டு ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்த செட்டை செரீனா 6–3 என்ற கணக்கில் போராடி வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை ஆட்டத்தின் 39ஆவது நிமிடத்தில் வென்றார். செரீனா வில்லியம்ஸ் அரை இறுதி போட்டியை இத்தாலியை சேர்ந்த ராபர்ட்டா வின்சியுடன் மோதுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்