U19 உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி!

ஞாயிறு, 16 ஜனவரி 2022 (10:36 IST)
U19 உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி!
19 வயதுக்குட்பட்டோர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி உள்ளது
 
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டி நேற்று தொடங்கிய நிலையில் நேற்றைய முதல் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின
 
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 46.5 ஓவர்களில் 232 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை அடுத்து 233 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 45.4 ஓவர்களில் 187 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது அடுத்து இந்தியா 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்