’ தல’ தோனியின் மறக்க முடியாத இரு சம்பவங்கள்! ரசிகர்கள் உருக்கம் !

திங்கள், 2 டிசம்பர் 2019 (18:15 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தற்போது, ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில் தனது 14 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் இரு முக்கியமான சம்பவங்கள் குறித்து  அவர் பகிர்ந்துள்ளார்.
அதில், கடந்த 207 ஆம் ஆண்டு நடைப்பெற்ற டி- 20 உலகக் கோப்பையில், இந்திய அணி கேப்டனாகக் இருந்து அணிக்கு  வென்று கொடுத்து முதல் சம்பவம். அப்போது (marine ride ) எனப்படும் கடற்கரை சாலையில், சக வீரர்களுடன், திறந்தவெளிப் பேருந்தில் பயணிந்ததை மறக்க முடியாத முதல் தருணம் என தெரிவித்துள்ளார்.
 
அடுத்ததாக, கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டி என தெரிவித்துள்ளார். மேலும் அந்தப் போட்டியின் போது, கடைசியாக 20 ரன்கள் அடிக்க வேண்டிய சூழல் இருந்த நிலையில், ரசிகர்கள் 'வந்தே மாதரம்' பாடலைப் பாடி உற்சாகம் ஊட்டினார்கள் என தெரிவித்தார்.
 
இந்நிலையில் தல தோனி விரைவில் இந்திய அணிக்கு திரும்ப வேண்டுமென அவரது ரசிகர்கள்  அனைவரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்