காஷ்மீரில் நடந்த போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் மந்தீப் சிங்கின் மகளான குர்மேகர் கார், தனது பேஸ்புக் பக்கத்தில், எனது தந்தையை பாகிஸ்தான் கொல்லவில்லை, போர் தான் கொன்றது, என வெளியிட்டிருந்தார்.
இந்த சம்பவம் சேவக்கின் கண்ணில் பட்டது, அதனால் அவரை கலாய்க்கும் விதமாக, நான் இரண்டு முச்சதம் அடிக்கவில்லை, எனது பேட் தான் அடித்தது, என டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து பலர் சேவக்கின் பதிவில் உள்நோக்கம் உள்ளதாக கூறினர். இது தொடர்பாக சேவக் கூறுகையில், குர்மேக்கரின் கருத்துக்கும் எனது டுவிட்டர் பதிவிற்கும் எந்த உள்நோக்கமும் இல்லை. இது வெறும் காமெடி மட்டுதான் என தெரிவித்துள்ளார்.