டி.என்.பி.எல் கிரிக்கெட்: சேப்பாக் அணிக்கு மேலும் ஒரு தோல்வி

வெள்ளி, 27 ஜூலை 2018 (06:37 IST)
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நெல்லையில் நடைபெற்ற போட்டி ஒன்றில் கோவை அணியிடம் சேப்பாக் அணி தோல்வி அடைந்தது. இதன்மூலம் விளையாடிய நான்கு போட்டிகளில் சேப்பாக் அணி இன்னும் ஒரு வெற்றியை கூட பெறவில்லை
 
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற கோவை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஷாருக்கான் 59 ரன்களும், கேப்டன் முகுந்த் 34 ரன்களும் எடுத்தனர். இதனால் கோவை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 158 ரன்கள் எடுத்தது.
 
159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய சேப்பாக் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரிலேயே ஓப்பனிங் பேட்ஸ்மேன் கங்கா ஸ்ரீதர் ராஜூ ரன் ஏதும் எடுக்காமலும், மூன்றாவது ஓவரில் கார்த்திக் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அஸ்வின் மட்டுமே ஓரளவுக்கு விளையாடி 36 ரன்கள் எடுத்தார். இறுதியில் சேப்பாக் அணி 18 ஓவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 53 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஷாருகான் ஆட்டநாயகன் விருதினை வென்றார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்