சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் இன்று மோதல்

சனி, 28 ஜூலை 2018 (15:45 IST)
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியுடன் இன்று மோதவுள்ளது.
டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, முன்னாள் சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை சந்திக்க இருக்கிறது.
 
கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் சேப்பாக் அணி சிறப்பாக விளையாடியது. அதற்கு நேர்மாறாக இந்த வருடம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது முதல் 4 லீக் ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது. ஒரு ஆட்டத்திலும் 150 ரன்களை எட்டவில்லை. 
 
அதேபோல் தூத்துக்குடி அணி இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் 2 போட்டியில் வெற்றி கண்டுள்ளது.
 
இந்நிலையில் இந்த இரண்டு அணிகளுமே தோல்வியில் இருந்து மீண்டு வர கடுமையாக பயிற்சி செய்து வருகிறது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இரவு 7.15 மணிக்கு போட்டி தொடங்கவிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்