இதில் தென்ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 242 ரன்களும், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 244 ரன்களும் சேர்த்திருந்தன. பின்னர், தென்ஆப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் 540 ரன்கள் குவித்தது. இதனால், ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றி இலக்காக 539 ஓட்டங்களை நிர்ணயித்தது.
தொடர்ந்து கடின இலக்கை ஆஸ்திரேலியா துரத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று 4ஆவது ஆட்டத்தில், டேவிட் வார்னரை 35 ரன்கள் எடுத்திருந்தபோது, ரபாடா வீசிய பந்தை தட்டிவிட்டு ஓடினார். ஆனால், தென் ஆப்ரிக்காவை வீரர் டெம்பா பவுமா அபாரமாக வார்னரை ரன் அவுட் செய்தார்.
இந்த ரன் அவுட் பெர்த் மைதானத்திலேயே சிறந்த ரன் அவுட் வர்ணனையாளர்கள் குறிப்பிட்டனர். மேலும், இந்த ரன் அவுட்டை தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ் பார்த்திருந்தால் கண்டிப்பாக வியந்து போயிருப்பார் என வர்ணித்தனர்.