அம்பதி ராயுடு தோல்வியால் சுரேஷ் ரெய்னாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்

ஞாயிறு, 17 ஜூன் 2018 (19:26 IST)
யோ யோ தேர்வில் அம்பதி ராயுடு தோல்வி அடைந்ததால் அவருக்கு பதிலாக சுரேஷ் ரெய்னா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் அம்பதி ராயுடு இடம்பெற்றார். இரண்டு ஆண்டுகளுக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு அம்பதி ராயுடுக்கு கிடைத்தது.
 
நடந்து முடிந்த ஐபிஎல் 2018 சீசனில் அம்பதி ராயுடு கலக்கினார். இதன்மூலம் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால் யோ யோ தேர்வில் தோல்வி அடைந்தார். இதனால் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். 
 
இதனால் சுரேஷ் ரெய்னாவுக்கு தற்போது ஒருநாள் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சுரேஷ் ரெய்னா வெகு நாட்களாக அணியில் இடம்பிடிக்க சிரம்பப்பட்டு வந்தார். இந்நிலையில் கடைசியாக இந்திய அணி இலங்கை அணியுடன் விளையாடிய தொடரில் இடம்பெற்றார். 
 
அதைத்தொடர்ந்து தற்போது அம்பதி ராயுடு யோ யோ தேர்வில் தோல்வி அடைந்ததால் சுரேஷ் ரெய்னாவுக்கு அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்