ஷிகர் தவான் 150; முரளி விஜய் 89 - இந்தியா 239 ரன்கள் குவிப்பு

புதன், 10 ஜூன் 2015 (20:58 IST)
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி வீரர் ஷிகர் தவான் சதத்தால் இந்திய அணி 239 ரன்கள் குவித்துள்ளது.
 
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் விளையாடவுள்ளது. இதில் இன்று நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 

 
அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய் மற்றும் தவான் இந்திய அணியின் இன்னிங்சை தொடங்கினர். இதில் இரு வீரர்களும் சேர்ந்து பொறுப்புடன் விளையாட அணியின் ரன் வேகம் சற்று அதிகரித்தது. தொடர்ந்து அசத்திய தவான் அரை சதத்தை கடந்தார்.
 
இந்நிலையில், ஆட்டத்தின் 23.3 ஓவரில் 107 ரன்கள் எடுத்த போது, மழை குறுக்கிடு காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது களத்தில் தவான் 74 ரன்னிலும், முரளி விஜய் 33 ரன்னிலும் எடுத்திருந்தனர்.
 
பின்னர் களமிறங்கி தொடர்ந்து ஆடிய இந்திய அணி வீரர் முரளி விஜய் 98 பந்துகளில் 7 பவுண்டரிகள் உட்பட 50 ரன்களை எடுத்தார். அதனை தொடர்ந்து, ஷிகர் தவான் 101 பந்துகளில் 16 பவுண்டரிகள் உட்பட 100 ரன்கள் குவித்தார்.
 
ஆட்டநேர முடிவில் இந்திய அணி 56 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 239 ரன்கள் குவித்துள்ளது. ஷிகர் தவான் 150 ரன்களுடனும், முரளி விஜய் 89 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்