இதில் செரீனா 6–3, 6–3 என்ற நேர்செட்டில் கனேபியை வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4 ஆவது சுற்று ஆட்டத்தில் நோவாக் ஜோகோவிச் 6–1, 7–5, 6–4 என்ற நேர்செட்டில் பிலிப் கோல்ஸ்கிரீபரை தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.
மேலும் ஜப்பான் வீரர் நிஷிகோரி 4–6, 7–6, 6–7, 7–5, 6–4 என்ற நேர்செட்டில் போராடி கனடா வீரர் மிலோச் ரானிச்சை வீழ்த்தி கால் இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.
கலப்பு இரட்டையர் கால் இறுதி ஆட்டத்தில் சானியா மிர்சா – புருனோ சோரஸ் ஜோடி 7–5, 2–6, 10–5 என்ற நேர்செட்டில் காதரினா செர்போனிக் –ரோகன் போபண்ணா ஜோடியை வீழ்த்தியது.