களிமண் ரொட்டி: சேவாக் பகிர்ந்த விழிப்புணர்வு வீடியோ!

புதன், 20 ஜூன் 2018 (19:48 IST)
இந்தியாவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான டன்னில் உணவு பொருட்கள், காய்கறிகள், பழங்கள், உணவு தானியங்கள் வீணாகி வரும் நிலையில் சில நாட்டில் மக்கள் களிமண்ணை தின்று வாழ்கின்றனர்.
 
இதனை மக்களுக்கு உணர்த்தும் விதமாக ஹெய்தி மக்கள் களிமண் ரொட்டி தயாரித்து சாப்பிடும் வீடியோவை கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும் அதோடு ஒரு பதிவையும் பதிவிட்டுள்ளார். 
 
அவரது பதிவு பின்வருமாறு, வறுமை, பசி, தென் அமெரிக்க நாடான ஹெய்தியில் மக்கள் களிமண்ணில் உப்பு கலந்து ரொட்டியாக செய்து  சாப்பிட்டு வருகிறார்கள். 
 
மக்களே நான் உங்களிடம் கேட்பது, தயவு செய்து நீங்கள் உண்ணும் உணவை வீணாக்காதீர்கள். உங்களால் அந்த உணவின் மதிப்பை அளவிடமுடியாது. ஆனால், ஹெய்தி நாட்டு மக்களுக்கு நாம் வீணாக்கும் உணவு என்பது மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். 
 
எனவே, உங்களிடம் தேவைக்கு அதிகமாக உணவு இருந்தால், தேவைப்படும் மக்களுக்குக் கொடுத்து உதவுங்கள். ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்கும் அமைப்புகள் இருந்தால், அவர்களிடம் கொடுத்து உதவுங்கள் என கூறியுள்ளார். 


வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்