மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய பள்ளி உள்கட்டுமான வசதியின்றி சிரமப்பட்டு வந்துள்ளது. இது குறித்து ராஜ்யசபா எம்.பி.யும், முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதன் பேரில், சச்சின் டெண்டுல்கர் தனது உள்ளூர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 70 லட்சத்திற்கும் நிதியை அளித்துள்ளார். மேலும், நூலகம், ஆய்வுகூடங்கள் மற்றும் மகளிருக்கு பொது அறைக்கான கட்டுமான பணிகளுக்கான உதவிகளையும் செய்து கொடுத்துள்ளார். இதனை அந்த பள்ளிக்கே நேரடியாக வந்து செய்துள்ளார்.