டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்சி நகரில் சமீபத்தில் தொடங்கியது. முந்தைய ஆட்டங்களில் விறுவிறுப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த சாய்னா, நேற்றைய ஆட்டத்தில் சீனதைபே வீராங்கனை தாய் ஜூ யிங்கை எதிர்கொண்டார்.
முதலில் தாய் ஜூ வசம் சென்ற ஆட்டம், பின்னர் சாய்னா கைவசம் வந்தது. இருப்பினும் தாய் ஜூ 21-13, 13-21, 21-6 என்ற செட் கணக்கில் சாய்னாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார்.