சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி!

சனி, 27 மார்ச் 2021 (10:48 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் நடந்த சாலை விழிப்புணர்வுக்கான ஓய்வு பெற்ற வீரர்களின் தொடரில் கலந்துகொண்டார். அந்த தொடர் முடிந்த சில தினங்களில் இப்போது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் தென்பட்டதால் அவர் சோதனை செய்துகொண்டார். அப்போது அவருக்கு பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளது.

ஆனால் அவரின் குடும்பத்தார் யாருக்கும் கொரோனா இல்லை என்றும் முடிவு வந்துள்ளது. இந்நிலையில் இப்போது சச்சின் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்