ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஸ்பார்ட்டன் என்ற நிறுவனம். இந்த விளையாட்டு நிறுவனம் கடந்த 2016 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கரிடம் விளம்பரம் குறித்த ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி இரண்டு ஆண்டுகளுக்கு சச்சினின் புகைப்படங்களை தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளில் பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டிருந்தது
இந்த நிலையில் இந்த ஒப்பந்தம் முடிந்த பின்னரும் சச்சின் புகைப்படத்தை இந்நிறுவனம் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததை அடுத்து சச்சின் தன் படங்களை பயன்படுத்துவதை நிறுத்துங்கள் என்று கூறியிருந்தார். ஆனாலும் இந்த நிறுவனம் அதனை கண்டுகொள்ளாமல் புகைப்படங்களை பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்
தன்னுடனான ஒப்பந்தம் முடிந்த பிறகும் தனது படத்தை பயன்படுத்துவதால் ஸ்பார்ட்டன் நிறுவனம் தனக்கு ரூ.14 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்று அந்த வழக்கில் சச்சின் கூறியிருந்தார். இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென ஸ்பார்டன் நிறுவனம் சச்சினிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது. அந்த நிறுவனத்தின் இயக்குனர் இதுகுறித்து கூறிய போது ’ஒப்பந்தங்களின் படி செயல்பட முடியாமல் போனதற்கு எங்கள் நிறுவனம் உண்மையில் வருந்துகிறது. சச்சின் டெண்டுல்கர் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பிரச்சினையை தீர்க்க பொறுமையாக செயல்பட்ட அவருக்கு நன்றி’ என்று கூறினார்