இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியுள்ளது. முதல் டெஸ்ட் தோல்விக்குப் பின்னர் இந்திய அணியில் பூம்ரா, நதீம் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நீக்கப்பட்டு அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் கில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து வந்த புஜாரா நிதானமாக விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் ஆட ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடி வருகிறார். சற்று முன்னர் அவர் 49 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். இந்திய அணி தற்போது 64 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.