டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்… ஆரம்பமே அதிர்ச்சி!

சனி, 13 பிப்ரவரி 2021 (10:16 IST)
சென்னையில் இன்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியுள்ளது. முதல் டெஸ்ட் தோல்விக்குப் பின்னர் இந்திய அணியில் பூம்ரா, நதீம் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நீக்கப்பட்டு அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் ஓவரிலேயே ஷுப்மன் கில் தனது விக்கெட்டை இழந்தார். அதையடுத்து இப்போது ரோஹித் ஷர்மா மற்றும் புஜாரா ஆகியோர் களத்தில் உள்ளனர். இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் சேர்த்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்