முடியுமா? : 'அதிவேக மனிதன்' என நிருபித்த உசைன் போல்ட்; 200மீ ஓட்டத்திலும் தங்கம்

வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (13:38 IST)
ரியோ ஒலிம்பிக் போட்டியின் 200மீ ஓட்டப்பந்தயத்திலும் தங்கம் வென்ற உசைன் போல்ட் மீண்டும் தன்னை அதிவேக மனிதன் என்பதை நிரூபித்துள்ளார்.
 

 
ரியோ ஒலிம்பிக்ஸில் ஜமைக்காவின் தடகளவீரர் உசைன் போல்ட் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்போட்டியிலும் வென்றுவிட்டார். உசைன் போல்ட் பந்தய தூரத்தை 19.79 விநாடிகளில் கடந்து எளிதாக வென்றார்.
 
போல்ட்டை தொடர்ந்து கனடாவின் ஆந்த்ரே டி கிராஸ் 20.02 விநாடிகளில் கடந்து 2ஆவது இடத்தையும், பிரான்ஸின் கிறிஸ்டோப் லெமாய்ட்ரே 20.12 விநாடிகளில் கடந்து 3ஆவது இடத்தையும் பிடித்தனர்.
 
இதற்கு முன்னதாக 200மீ ஓட்டப்பந்தயத்தில் 2008 பெய்ஜிங் மற்றும் 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் நிகழ்த்தியதை அடுத்து 3ஆவது முறையாக தற்போது ரியோவிலும் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ள்னார்.
 
400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஜமைக்கா அணி தங்கப்பதக்கம் வென்றால், தொடர்ந்து என மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் மூன்று முறை தொடர்ச்சியாக தங்கப்பதக்கம் வென்ற வீரர் என்ற மகத்தான சாதனைக்கு உசைன் போல்ட் சொந்தக்காரர் ஆகிவிடுவார்.

வெப்துனியாவைப் படிக்கவும்