முட்டாள்தனம் செய்யவிருந்த கோலி; தடுத்த சாஸ்திரி: வைரல் வீடியோ!!

புதன், 22 நவம்பர் 2017 (13:00 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் கோலியின் பங்கு பெரிதும் பேசப்பட்டது.

 
ஆனால், கோலி செய்த முட்டாள்தனத்தை பற்றிய செய்தி தற்போது வெளியாகியுள்ளது. இந்த போட்டியின் மூலம் கோலி தனது 50 வது சென்சூரியை சர்வதேச அரங்கில் பதிவுசெய்தார்.
 
முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆனாலும் இரண்டாம் இன்னிங்ஸில் சதம் அடித்தார். கோலி சதம் அடிக்க முக்கிய காரணமாக இருந்தது பயிற்சியாளர் ரவி சாஸ்திரிதானாம். 
 
போட்டி டிராவாகும் நிலையில் இருந்த காரணத்தால் கோலி செஞ்சுரி அடிக்கும் முன்பே டிக்ளேர் செய்ய முடிவு செய்து அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் அனுமதி கேட்டு உள்ளார். 
 
அதாவது இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை சீக்கிரம் முடித்து கொள்ள தான் 97 ரன்னில் இருக்கும் போது டிக்ளேர் செய்ய முடிவு செய்துள்ளார்.
 
ஆனால், ரவி சாஸ்திரி, கோலியிடம் இன்னும் இரண்டு ஓவர்கள் விளையாடும்படி கூறியுள்ளார். அதாவது, செஞ்சுரி அடித்த பின் டிக்ளேர் செய்தால் போதும் என்று கூறியுள்ளார். 
 
இதன் பின்னர்தான் கோலி தனது 50 வது சதத்தை பதிவு செய்த பின்னர் போட்டியை டிக்ளேர் செய்துள்ளார்.

How about that for sign language? Care to decode this conversation between the Captain and Coach? #INDvSL pic.twitter.com/cN54UzGJy8

— BCCI (@BCCI) November 20, 2017

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்