டிஎன்பிஎல் இறுதி போட்டியில் விளையாடிய மழை: போட்டி கேன்சல்

திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (07:42 IST)
டிஎன்பிஎல் இறுதி போட்டியில் விளையாடிய மழை: போட்டி கேன்சல்
கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்த நிலையில் நேற்று இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டதால் போட்டி ரத்து செய்யப்பட்டு இரண்டு அணிகளும் சாம்பியன் என அறிவிக்கப்பட்டது
 
நேற்றைய போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியை சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியுடன் மோதியது. மழை காரணமாக 17 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டது. இதனை அடுத்து முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது.
 
இதனை அடுத்து 17 ஓவர்களில் 139 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சேப்பாக் சூப்பர் கிங்ஸ் விளையாடியது. அந்த அணி 4 ஓவர்களில் 14 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த போது மழை மீண்டும் குறுக்கிட்டது
 
அதன் பின் மழை நிற்கவில்லை என்பதை அடுத்து இறுதி போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்