சாம்பியன் விஜேந்தர் சிங்குக்கு குவியும் வாழ்த்து

செவ்வாய், 19 ஜூலை 2016 (10:31 IST)
குத்துச்சண்டையில் ஆசிய பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் விஜேந்தர் சிங்குக்கு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


 


ஆசிய பசிபிக் சூப்பர் மிடில் வெயிட் சாம்பியன் பட்டத்துக்கான குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீரர் விஜேந்தர் சிங் 98-92, 98-92, 100-90 என்ற புள்ளிக்கணக்கில் ஆஸ்திரேலிய வீரர் கெர்ரி ஹோப்பை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி அவரை வாழ்த்தியுள்ளார். இவர்களை தவிர ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் இந்திய அணியின் கேப்டன் தோனி, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வீரேந்தர் ஷேவாக், வி.வி.எஸ்.லக்‌ஷ்மண், ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோரும் விஜேந்தர் சிங்கை வாழ்த்தியுள்ளனர்.

முன்னதாக இந்த குத்துச் சண்டையில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு விஜேந்தர் சிங் நிருபர்களிடம், இப்போட்டியில் நான் அடைந்த வெற்றியை மறைந்த குத்துச் சண்டை வீரர் முகமது அலிக்கு சமர்ப்பிக்கிறேன் என்று கூறினார்.

குத்துச்சண்டை வீரர்களுக்கான தரவரிசையில் விஜேந்தர் சிங் இப்போது முதல் 15 இடங்களுக்குள் இருப்பது குறிப்பிடதக்கது.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்