கொல்கத்தா அணி ஐபிஎல் தொடர் ஆரம்பத்தில் மிக மோசமாக விளையாடி வந்தது. ஆனால் இப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர் தொடங்கப்பட்ட பின்னர் விஸ்வரூபம் எடுத்து இரண்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகளைக் குவித்துள்ளது. இந்நிலையில் அந்த அணியில் அறிமுக வீரராக களமிறங்கியுள்ள வெங்கடேஷ் என்ற இளம் வீரர் கவனம் ஈர்த்துள்ளார். பெங்களூர் மற்றும் மும்பை ஆகிய அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளும் அவர் அதிரடியாக விளாசி வருகிறார். நேற்றைய போட்டியில் அவர் 30 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளார்.
இதன் மூலம் முன்னாள் வீரர்களின் கவனத்தையும் பெற்றுள்ளார். இந்நிலையில் பார்த்தீவ் படேல் இவர் குறித்து எந்த வொரு டொமஸ்டிக் போட்டியிலும் விளையாடாத பர்த்தீவ் படேல் விளையாடும் விதம் சிறப்பாக உள்ளது. அவர் பயமற்று விளையாடுகிறார். அவரால் நடுவரிசை மற்றும் பின் வரிசையிலும் விளையாட முடியும். பந்துவீசவும் முடியும். யுவ்ராஜ் சிங்கின் பிரதிபலிப்பு அவரிடம் உள்ளது. மிகவும் நிதானமாக விளையாடுகிறார். எனக் கூறியுள்ளார்.