சர்வதேச களத்தில் மீண்டும் பி வி சிந்து…நம்பிக்கையுடன் களமிறங்கல்!

புதன், 23 டிசம்பர் 2020 (11:16 IST)
இந்திய பேட்மிண்ட்டன் வீரர் பி வி சிந்து மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு நடந்த பேட்மிண்ட்டன் போட்டியில் வெள்ளி வென்று அசத்தியவர் இந்தியாவைச் சேர்ந்த பி  வி சிந்து. அதன் பின்னர் கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்றார். இந்தியாவில் பேட்மிண்ட்டன் விளையாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். இந்நிலையில் பயிற்சியாளர் மற்றும் குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக பி.வி. சிந்து லண்டன் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

ஆனால் இதை அவர் மறுத்துள்ளார். ஊட்டச்சத்து ஆலோசனைகள் மற்றும் உடற்பயிற்சி ஆலோசனைகளை பெறுவதற்காகவே லண்டன் வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தினமும் பெற்றோரிடம் தொலைபேசி மூலம் பேசி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அதே போல பயிற்சியாளர் கோபிசந்துடனும் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை எனத் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இப்போது தான் ஓய்வு பெற போவதாக பி வி சிந்து தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அந்த செய்தி உண்மை இல்லை என்பது பின்னர் தெரிய வந்தது.

இந்நிலையில் இப்போது பி வி சிந்து தாய்லாந்து ஓபன், டயோட்டா தாய்லாந்து ஓபன், உலக டூர் இறுதி சுற்று போட்டிகளில் பங்கேற்று விளையாடுவார் என இந்திய பேட்மிண்ட்டன் சங்கம் தெரிவித்துள்ளது. இதை உறுதி செய்த பி வி சிந்து 8  மாதங்களுக்குப் பிறகு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை உறுதி செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்