பாதியில் விட்டு செல்லும் வெளிநாட்டு வீரர்களுக்கு தடையா? ஐபிஎல் நிர்வாகம் ஆலோசனை..!

Siva

ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (17:50 IST)
ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ள ஒப்பந்தம் ஆகிவிட்டு அதன் பிறகு பாதியில் விட்டு செல்லும் வீரர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரில் விளையாட முடியாது என்ற தடை விதிக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் ஐபிஎல் தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் நிலையில் இதில் வெளிநாட்டு வீரர்களும் பலர் கலந்து கொண்டனர் என்பது தெரிந்தது. ஆனால் சில வெளிநாட்டு வீரர்களை அதிக விலை கொடுத்து அணிகள் வாங்கிய நிலையில் திடீரென எந்தவிதமான காரணமும் இல்லாமல் பாதியில் சில வீரர்கள் தொடரில் இருந்து விலகி உள்ளனர்.

இது குறித்து ஆலோசனை செய்த ஐபிஎல் நிர்வாகிகள் காயம் அல்லது குடும்ப அவசரம் என்ற காரணம் இருந்தால் மட்டுமே தொடரிலிருந்து விலக வேண்டும் என்றும் எந்த வித காரணமும் இல்லாமல் தொடரில் இருந்து விலகினால் இரண்டு ஆண்டுகளுக்கு அந்த வீரர் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத அளவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஐபிஎல் நிர்வாகிகள் ஐபிஎல் கமிட்டி இடம் பரிந்துரை செய்ததாகவும் இந்த பரிந்துரையை ஐபிஎல் கமிட்டி ஏற்று கொண்டால், அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்