தடகள போட்டியில் இந்திய வீரர் நீராஜ் சோப்ர புதிய உலக சாதனை (வீடியோ)

ஞாயிறு, 24 ஜூலை 2016 (13:17 IST)
போலாந்தின் பைட்கோஸ்கசில் நடைபெற்று வரும், இருபது வயதுக்கு உட்பட்டோருக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.


 

 
அங்கு நடைபெறும் போட்டிகளில், ஆண்கள் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 86.48 மீட்டர் தூரம் எறிந்து புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம், உலக சாதனை புரிந்த, முதல் இந்திய தடகள வீரர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது.
 
கடந்த 2011ஆம் ஆண்டில், லாத்வியா வீரர் சிர்மால்ஸ் 84.69 மீட்டர் தூரம் வீசியதே, இதுவரை உலக சாதனையாக இருந்தது.தற்போது அந்த சாதனயை இந்திய வீரர் நீராஜ் சோப்ரா முறியடித்துள்ளார். 20 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் இந்தியா வெல்லும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். 
 
இந்த சாதனை குறித்து நீராஜ் சோப்ரா கருத்து கூறிய போது  “நான் தங்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆனால் 86 மீட்டர் தூரம் வீசி உலக சாதனையை முறையடிப்பேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை ” என்று கூறினார்.   
 

வெப்துனியாவைப் படிக்கவும்