கால்பந்து டி20 ஆன ஃபுட்சால்:
மூன்று மணி நேரம் வரை திறந்தவெளி மைதானத்தில் விளையாடப்படும் கால்பந்து விளையாட்டை மொத்தமாய் சுருக்கி உள்விளையாட்டரங்கில் நம்ம ஊர் டி20 கிரிக்கெட் போல, மொத்தம் நாற்பது நிமிடத்தில் விறுவிறுப்புடன் விளையாடித் தீர்ப்பது ஃபுட்சால்.
முதல் பாதி 20 நிமிடம் அடுத்த பாதி 20 நிமிடம் என மொத்தம் 40 நிமிடங்கள். 15 நிமிடங்கள் இடைவேளை வழங்கப்படும். சென்னை, கோவா, மும்பை, கொச்சி, பெங்களூரு என ஒவ்வொரு அணிக்கும் ஐந்து வீரர்கள் கொண்ட ஆட்டம் நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியது.
சென்னை - மும்பை முதல் ஆட்டம்:
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை அணியில் பிரேசில் வீரர் பால்கோவும், மும்பை அணியில் மான்செஸ்டர் யுனைடெட் முன்னாள் கேப்டன் ரேயான் கிக்ஸூம் நட்சத்திர வீரர்களாக களமிறங்கினர்.
பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மும்பை - கொச்சி அணிகள் மோது கின்றன. இதைதொடர்ந்து 8 மணிக்கு நடை பெறும் 2-வது ஆட்டத்தில் கொல்கத்தா, பெங்களூரு அணியை சந்திக்கிறது.