159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை 18.4 ஓவர்களில் 6 விக்கெட் மட்டுமே இழந்து 159 ரன்கள் எடுத்தது. இதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 3விக்கெட்டுக்களை வீழ்த்திய மும்பை அணியின் பூம்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.