உலக அளவில் 7ஆவது இடம்; இந்திய அள்வில் முதல் இடம் – செஞ்சுரியில் ஷமி புதிய சாதனை.

வியாழன், 24 ஜனவரி 2019 (11:28 IST)
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நேற்று நியுசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிகளில் 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். முதல் விக்கெட்டைக் கைப்பற்றிய போது அதிவேகமாக 100 விக்கெட்களைக் கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

இதுவரை 56 போட்டிகளில் விளையாடியுள்ள ஷமி 102 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். அவரது சராசரி 25.7 ஆகும். இதற்கு முன்னர் 59 மேட்ச்களில் 100 விக்கெட் வீழ்த்தியிருந்த இர்பான் பதானின் சாதனையை இதன் மூலம் ஷமி முறியடுத்துள்ளார்.

உலக அளவில் ரஷித் கான்(44),ஸ்டார்க்(52), சஹ்லைன் முஷ்டாக்(53), ஷேன் பாண்ட்(54), பிரெட் லி (55), ட்ரண்ட் போல்ட் (56) ஆகியோருக்கு அடுத்தபடியாக 7ஆவது இடத்தில் ஷமி உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்