மரியோ கோட்சே என்னதான் உலகக்கோப்பையை வென்ற அணியைச் சேர்ந்தவராக இருந்தாலும், கோப்பையை வெல்வதற்கான கோலை அடித்தவராக இருந்தாலும், அவரும் ஒரு மெஸ்ஸியின் ரசிகரைப் போல போட்டி முடிந்த கையோடு மெஸ்ஸியுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.
கோட்சே தனது வலைப்பக்கத்தில் இந்த புகைப்படத்தை "ஜீனியஸ் உடன் நான்" என்ற தலைப்பிட்டு பதிவேற்றம் செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் உலகக்கோப்பை போட்டியில் வெற்றி பெற்றதற்கான 'வின்னர் மெடல்'-ஐ கழுத்தில் அணிந்தவாறு புகைப்படம் எடுத்துள்ளார். இருந்தாலும் மெஸ்ஸியுடன் அவர் நிற்கும் புகைப்படத்தில் மிகவும் பவ்யமாகவே காட்சியளிக்கிறார்.