புதிய விதிமுறைகளின்படி மாநில கிரிக்கெட் சங்கம் அல்லது இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ஒருவர் 6 ஆண்டுகள் மட்டுமே பதவி வகிக்க முடியும். மீண்டும் அவர்கள் பதவியேற்க விரும்பினால் 3 ஆண்டுகள் கழித்துதான் விண்ணப்பிக்க முடியும். மேலும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் சங்கங்களில் நிர்வாகியாக இருக்க முடியாது போன்ற நிறைய புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த புதிய விதிமுறைகளை ஏற்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. பொதுக்குழுவில் இந்த விதிமுறைகளை மாற்றி மீண்டும் பழைய விதிமுறைகளையே பின்பற்றுமாறு செய்யக்கூடாது எனவும், இந்திய கிரிக்கெட்டை மேம்படுத்த புதிய நடைமுறைகள் அவசியம் எனவும் லோதா கமிட்டி எச்சரித்துள்ளது.