இதன்பின்னர் இறுதிப்போட்டியில் ஜெர்மனியைச் சேர்ந்த மிட்செல் க்ரோப்பனை, தீபிகா குமாரி சந்தித்தார். இந்த போட்டியின் முதல் செட்டில் தீபிகா குமாரி 2-0 என முன்னிலைப் பெற்றார். 2-வது செட் டிராவில் முடிந்ததால் இருவரும் தலா ஒரு புள்ளிகள் பெற்றனர். 3-வது சுற்றில் ஜெர்மனி வீராங்கனை மிட்செல் கைப்பற்றி ஸ்கோரை 3-3 என சமநிலை படுத்தினார்.
இதனையடுத்து நடைபெற்ற 4-வது, 5-வது செட்டில் சிறப்பாக விளையாடிய தீபிகா குமாரி 29 புள்ளிகள் மற்றும் 27 புள்ளிகள் பெற்றார். இதனால் ஸ்கோர் 7-3 என உயர்ந்தது. இதன்மூலம் தீபிகா குமாரி உலகக்கோப்பை வில்வித்தை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.
ஏற்கனவே கடந்த 2011, 2012, 2013 மற்றும் 2015 ஆகிய வருடங்களில் உலகக்கோப்பை வில்வித்தை போட்டியில் தீபிகா குமாரி வெள்ளிப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.