இந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 5ஆம் தேதி தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து தொடர் தொடங்குவதற்கு முன் இரு அணிகள் இடையே பயிற்சி ஆட்டம் நடைபெற உள்ளது.
பயிற்சி ஆட்டம் என்பது நாம் கொஞ்சமாவது பயிற்சி எடுத்துக்கொள்வதற்காகவும், திறனை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் விளையாடுவது. ஆனால் உண்மையான போட்டி நடைப்பெறக் கூடிய மைதானத்தின் பிட்சை ஒப்பிடும் போது அதில் 15% கூட இல்லாத மைதானத்தில் விளையாடுவதால் என்ன பயன். இதில் எப்படி நாம் பயிற்சி எடுக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.