ஆட்டநாயகன் விருது பெற்ற கோஹ்லி வெற்றிக்கு ரோஹித்தும் தோனியும் கொடுத்த ஒரு முக்கியமான யோசனைப் பெரிதும் உதவியது எனக் கூறியுள்ளார். அதில் ‘நான் பேட் செய்ய இறங்கியபோது சூழ்நிலை கடினமாக மாறியது. கடைசி வரை ஆடுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. இன்று விஜய் சங்கர் பிரமாதமாக ஆடினார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் ரன் அவுட் ஆகும் சூழல் உருவானது. இக்கட்டான சூழ்நிலையில் விஜய் சங்கரை உண்மையில் 46 ஆவது ஓவரில் கொண்டு வரலாம் என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால் ரோஹித் சர்மா, தோனி ஆகியோரிடம் ஆலோசித்த போது இருவரும் பும்ரா, ஷமியே வீசட்டும் நமக்கு இன்னும் ஓரிரு விக்கெட்டுகள் விழுந்தால் நாம் டாப்பில் இருப்போம் என்றனர் அதுதான் மிகச்சரியாக நடந்தது. விஜய் சங்கர் ஸ்டம்ப் டு ஸ்டம்ப் வீசி எளிதாக வைத்துக் கொண்டார். அதுதான் வேலை செய்தது. இது போன்ற போட்டிகள் தன்னம்பிக்கையை அதிகரிக்கின்றன. ரோஹித்துடன் பேசுவதும் கைகொடுக்கிறது, தோனி நீண்டகாலமாக இந்தப் பணியைச் செய்து வருகிறார்.’ எனப் புகழாரம் செய்துள்ளார்.