நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தூத்துக்குடி அணியினர் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 175 ரன்கள் எடுத்தனர். அந்த அணியின் சுப்பிரமணிய சிவா அபாரமாக விளையாடி 40 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரிகளும் ஐந்து சிக்சர்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ராஜகோபால் 34 ரன்களும் வெங்கடேஷ் 30 ரன்களும் எடுத்தனர்
இதனை அடுத்து 176 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய காரைக்குடி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு இழந்து 118 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் தூத்துக்குடி அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காரைக்குடி அணியின் சூரியபிரகாஷ் 31 ரன்களும் அஸ்வின்குமார் 30 ரன்களும் ஸ்ரீனிவாசன் 21 ரன்களும் எடுத்தனர்
இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய தூத்துக்குடி அணியின் கேப்டன் சுப்பிரமணிய சிவா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நேற்றைய போட்டியின் முடிவிற்குப் பின்னர் தூத்துக்குடி அணி 4 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. காரைக்குடி அணி 2 புள்ளிகள் மட்டுமே பெற்று ஏழாவது இடத்தில் உள்ளது. திண்டுக்கல், கோவை மற்றும் சேப்பாக்கம் அணிகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது