’நீங்க இந்தியன்தானே’ நிருபரை வெலுத்து வாங்கிய கபில்தேவ்

புதன், 21 செப்டம்பர் 2016 (11:22 IST)
அக்டோபர் 7ம் தேதி முதல் அகமதாபாத் நகரில் உலக கபடிப் போட்டி நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக மும்பையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் கபில் தேவ் கலந்து கொண்டு கோபமாக பேசினார்.


 
 
மும்பையில் உலக கபடிப் போட்டி குறித்த செய்தியாளர்கள் கூட்டம் நடந்தது. அப்போது செய்தியாளர் ஒருவர், பாகிஸ்தான் அணி இந்தப் போட்டித் தொடரில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கேட்டார். 
 
அதைக் கேட்டதும் கோபமடைந்த கபில் தேவ், ’நீங்க இந்தியர்தானே, இந்தியராக இருந்தால் இந்தக் கேள்வியைக் கேட்க மாட்டீர்கள். எந்த நேரத்தில் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்? இதுபோன்ற விவகாரங்களை எல்லாம் அரசிடம் விட்டு விடுவோம். விளையாட்டு வீரர்கள் விளையாட்டை மட்டுமே பார்க்க வேண்டும்’ என கடுமையாக பேசினார். பின்னர், இந்திய அணியினரின் சீருடையை கபில்தேவ் வெளியிட்டார். 
 
இந்தியா உள்பட 12 அணிகள் இந்த உலகக் கோப்பை கபடித் தொடரில் கலந்து கொள்ளவுள்ளன. இது 3வது உலகக் கோப்பைப் போட்டியாகும். இதற்கு முன்பு 2004 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் முந்தைய உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்