ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஒசாகா

சனி, 26 ஜனவரி 2019 (17:08 IST)
கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கிளைமாக்ஸான இறுதி போட்டி இன்று நடைபெற்றது. செக் குடியரசு நாட்டின் குவிட்டோ மற்றும் ஜப்பான் நாட்டின் ஒசாகா ஆகியோர் இந்த இறுதி போட்டியில் மோதினர்
 
பார்வையாளர்கள் ஆதரவு ஒசாகாவுக்கு அதிகம் இருந்ததால்  அவர் ஆரம்பம் முதலே உற்சாகத்துடன் விளையாடினார். இருப்பினும் குவிட்டோ அவருக்கு கடினமான போட்டியை கொடுத்தார். 
 
இந்த நிலையில் முதல் செட்டை 7-4 என்று உற்சாகத்துடன் ஒசாகா கைப்பற்றினாலும் இரண்டாவது செட்டில் சுதாரித்த குவிட்டோ 7-5 என்ற புள்ளிக்கணகில் கைப்பற்றினார். இதனால் சாம்பியன் பட்டம் யாருக்கு என்ற செட்டில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒசாகா வெறித்தனமாக விளையாடியதால் அவரை குவிட்டோ சமாளிக்க முடியவில்லை.

இதனையடுத்து 3வது செட்டை 6-4 என்று கைப்பற்றிய ஒசாகா, இந்த ஆண்டின் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் பெற்றார். அவருக்கு ஜப்பானில் இருந்து மட்டுமின்றி உலகமெங்கிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்