முதல் ஒருநாள் போட்டியில் ஜடேஜா இல்லாதது ஏன்? ரசிகர்கள் அதிருப்தி!

வெள்ளி, 22 ஜூலை 2022 (19:48 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இன்று முதலாவது கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீசி வருகிறது என்பதும் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சற்று முன் வரை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 9 ஓவர்களில் 68 ரன்கள் எடுத்துள்ளது
 
இந்த நிலையில் முதல் போட்டியில் இந்திய அணியில் ஜடேஜா இடம்பெறவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
 
இதுகுறித்து அணி நிர்வாகி கூறியபோது ஆல் ரவுண்டர் ஜடேஜாவுக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டதாகவும் அதனால் அவர் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விலகி உள்ளதாகவும் கூறியுள்ளனர். இதனால் அவரது ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்