இந்நிலையில் அக், 14 நேற்று இரவு நடந்த 3 ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ்–புனே சிட்டி அணிகள் மோதின. சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் பலம் வாய்ந்த அணியாக டெல்லி திகழ்கிறது. 5 முறை இலக்கை நோக்கி ஷாட் அடித்த டெல்லி வீரர்களின் முயற்சிகளை புனே கோல் கீப்பர் தொடர்ந்து முறியடித்தார்.
புனே சிட்டி வீரர்களின் ஆட்டமும் இறுதிவரை எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இறுதியில் ஆட்டம் கோல் எதுவுமின்றி 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.